2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

'விமர்சனங்கள் ஒரு சமூகத்தின் கண்ணாடியாக அமைகின்றன'

Thipaan   / 2014 நவம்பர் 02 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


விமர்சனங்கள் ஒரு சமூகத்தின் கண்ணாடியாக அமைகின்றன. அரசியல், அபிவிருத்தி, எழுத்துத்துறை, கல்வி என எத்துறையாக இருந்தாலும் அவற்றுக்கான விமர்சனங்கள் யதார்த்தமானவையாகவும் உண்மையானவையாகவும் இருக்குமாயின் அது சமூகத்தில் பாரிய மாற்றத்தினை கொண்டுவரும் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, சனிக்கிழமை (01) தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை எஸ்.எல். மன்சூர் எழுதிய 'பதிவுகளின் சங்கமம்' நூல்வெளியீட்டு விழா அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அததியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அமைச்சர் உதுமாலெப்பை தொடர்ந்து உரையாற்றுகையில்,

நவீன கல்வியல் சிந்தனைகளை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதற்கு தன்னாலான அர்ப்பணிப்பை செய்து கொண்டு வரும் இந்த நூலாசிரியிர் எஸ்.எல். மன்சூர் பாராட்டப்பட வேண்டியவர்.

வளர்ந்து வரும் சிறுவர்களுக்கும், ஆசிரிய சமூகத்துக்;கும் உயிரூட்டிக்கொடுப்பவராகவும் ஒரு சிறந்த ஊடகவியலாளாராகவும் ஆசானாகவும் விமர்சகராகவும் இருந்து வருவது தென்கிழக்குப் பிரதேசத்துக்கு கிடைத்த பெருமையாகும்.

வாசிப்பு மற்றும் தமிழ் மொழி என்பனவற்றுக்கு ஒதுக்கப்படுகின்ற நேரம் குறுகி வருகின்ற இன்றைய நவீன கால கட்டத்தில் இவ்வாறான நூல் வெளியீடுகளும்;, எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஒன்று கூடி சங்கமித்து இருப்பதும் வரவேற்கத்தக்க விடயமாகும்.

இன்றைய கால கட்டத்தில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், விமர்சகர்கள் சுதந்திரமாக செய்றபடுவதற்கான சந்தர்பபம் அமைக்கப்படவில்லை. இவ்வாறானவர்களுக்கான உதவிகள், ஊக்கங்கள் கொடுப்பதற்கான வாய்ப்புக்களும் அருகிக் கொண்டு வருகின்றன.

நூல் ஒரு காலத்தின் பதிவாக அமைகின்றது. மொழி ஆளுமையுள்ளவர்களினால்தான் இவ்வாறான நூல்களை எழுத முடிகின்றது. இந்த மொழியாழுமையுள்ளவர்கள் எந்தவொரு கருமத்தையும் காத்திரமாக செய்பவர்களாகவும் உள்ளனர்.

எமது பிரதேசத்தில் இலக்கிய மன்றங்களை அமைக்க வேண்டும், அந்த மன்றங்கள் ஒவ்வொரு வருடமும் பொதுமக்கள் பார்iவியிடும் வகையில் கலை, கலாசார, பாரம்பரியங்களை பிரதி பலிக்கும் வகையில் கவிதைகள், பட்டிமன்றங்கள், கட்டுரைகள், பாடல்கள் போன்ற கலை நிகழ்வுகளை நடத்த வேண்டும்.

அப்போதுதான் எமது சமூகத்தின் மத்தியில் மொழி, இலக்கியம், கலைகள் என்பவற்றை வெளிக் கொண்டுவருவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். இவ்வாறு வருடாவரும் கலை, இலக்கிய விழாக்களை நடத்துவதற்கான செலவீடுகளை பொறுப்பேற்பதற்கும் நான் தயாராகவுள்ளேன் என்றார்



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .