2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

முறிந்த சிறகும் என் வானமும் நூல் வெளியீடு

Gavitha   / 2014 நவம்பர் 01 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்

சிரேஷ்ட ஊடகவியலாளர் ரி.எல். ஜவ்பர்கான் எழுதிய முறிந்த சிறகும் என் வானமும் கவிதை நூல் வெளியீட்டு விழா காத்தான்குடி அல்மனார் அறிவியற் கல்லூரி மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்றது.

மூத்த எழுத்தாளர் எஸ்.எல்.எம். ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் முதன்மை அதிதியாக கலந்து கொண்டு நூலை வெளியீட்டு வைத்தார்.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறுக், கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் எம்.எஸ். சுபைர், உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் எம்.கணேசராஜா, மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம். உதயகுமார், மட்டக்களப்பு ரொட்டறிக் கழகத் தலைவர் டொமங்கோ ஜோர்ஜ், கிழக்கு பல்கலைக்கழக அழகியல் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி கே. பிரேம்குமார், கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியக பணிப்பாளர் பொன். செல்வநாயகம் ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .