2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

சாகித்திய விழாவில், கலாநெஞ்சன் ஷாஜஹானுக்கு பரிசுகள்

Thipaan   / 2014 ஒக்டோபர் 18 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


நீர்கொழும்பு பிரதேச செயலகம் கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து பிரதேச சாகித்திய கலா மகோற்சவத்துக்காக நடத்திய இலக்கியப் போட்டி நிகழ்ச்சிகளில், ஊடகவியலாளரும்  கவிஞரும் எழுத்தாளருமான எம்.இஸட். ஷாஜஹானுக்கு (கலாநெஞ்சன்), நான்கு பரிசில்கள் கிடைத்துள்ளன.

கவிதை மற்றும் சிறுவர் கதை ஆக்கப் போட்டிகளில் முதலாமிடங்களையும் பாடலாக்கம் மற்றும் சிறுகதைப் போட்டிகளில் இரண்டாமிடங்களையும் இவர் பெற்றுள்ளார்.

அத்துடன் கம்பஹா மாவட்ட செயலகம் கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து மாவட்ட சாகித்திய கலா மகோற்சவத்துக்;காக நடத்திய இலக்கியப் போட்டி நிகழ்ச்சிகளிலும் ஷாஜஹானுக்கு இரண்டு இடங்கள் கிடைத்துள்ளன.

கம்பஹா மாவட்ட போட்டியில் சிறுவர் கதை ஆக்கப் போட்டியில் முதலாமிடத்தையும், கவிதை ஆக்கப் போட்டியில் இரண்டாமிடத்தையும் இவர் பெற்றுள்ளார்.

கலாநெஞ்சன் ஷாஜஹன் என்ற பெயரில் எழுதிவரும் இவர் இரண்டு கவிதைத் தொகுதிகளையும் இஸ்லாமியப் பாடல் தொகுதிகள் இரண்டினையும் வெளியிட்டுள்ளதோடு, பல்வேறு இலக்கியப் போட்டிகளில் தேசிய ரீதியில் பல பரிசில்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.

கல்விமானி பட்டம், கல்வி முதுமானிப் பட்டம் (தேசிய கல்வி நிறுவகம்), இதழியல் துறையில்  டிப்ளோமா (கொழும்பு பல்கலைகழகம்), மனித உரிமைகள் தொடர்பான டிப்ளோமா, கணனித் துறையில் டிப்ளோமா என்பவற்றையும் எம். இஸட். ஷாஜஹான் ஏற்கெனவே பெற்றுள்ளார். அத்துடன் இவர் சமாதான நீதவானாகவும் உள்ளார்.

கொழும்பு ஹமீத் ஹல் ஹுசைனி தேசியக் கல்லூரி. மருதானை ஸாஹிராக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரான  ஷாஜஹான் இலக்கியம் மற்றும் சமூக சேவை பங்களிப்புக்காக 'சாமஸ்ரீ தேச கீர்த்தி'; ,'கவியத் தீபம்','காவிய பிரதீப' ஆகிய பட்டங்கள் வழங்கி  கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 



You May Also Like

  Comments - 0

  • k.m.muneer ahmad Sunday, 19 October 2014 03:41 AM

    வாழ்துக்கள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .