2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

பாரம்பரிய கலைவடிவமான புலிக்கூத்துக்கள் தொடர்பான ஆற்றுகை

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 17 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


–வடிவேல் சக்திவேல்,கே.எல்.ரி.யுதாஜித்,எஸ்.பாக்கியநாதன் 


பாரம்பரிய கலைவடிவமான புலிக்கூத்துக்கள்  தொடர்பான ஆற்றுகை  மட்டக்களப்பு வந்தாறுமூலை கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் நேற்று வியாழக்கிழமை (16) மாலை நடைபெற்றது.

கிழக்கு மாகாண கிராமிய மக்களின் கலைவடிவமாகக் கருதப்படும் புலிக்கூத்து இந்த நூற்றாண்டுக்கு பொருத்தமானதாக எவ்வாறு வடிவமைக்க முடியுமென்பது தொடர்பாக கிழக்கு பல்கலைக்கழகம் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காட்டுக்கு தேன் எடுக்கச் செல்லும் தொழிலாளர்களின் அனுபவத்தை சித்தரிக்கும்  வாகரை – அம்பந்தனாவெளி புலிக்கூத்து,  புலியுடன் வாழ்க்கை நடத்தும் வேடுவர்களின் கதையை சித்தரிக்கும் வந்தாறுமூலை - பலாச்சோலை புலிக்கூத்து,  பாரம்பரியமாக மக்களை மகிழ்விப்பதற்கான புலிக்கூத்து போன்ற கலைவடிவங்கள் இதன்போது ஆற்றுகைப்படுத்தப்பட்டன.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .