2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

வர்ண மீன்கள் ஓவிய கண்காட்சி

Kogilavani   / 2014 ஒக்டோபர் 13 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை, சிறுவர் சித்திர கலைககூட சிறுவர்களின் வர்ண மீன்கள் ஓவிய கண்காட்சி சனிக்கிழமை(11)  ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி ஆரம்ப பிரிவு வளாகத்தில் நடைபெற்றது.

சித்திர ஆசிரியர் அ.அருள்பாஸ்கரனின் நெறிப்படுத்தில் நடைபெற்ற இக்கண்காட்சியில் பொருளாதார அபிவிருத்த பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, திருகோணமலை வலயக்கல்வி பணிப்பாளர் ந.விஜேந்திரன், ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அதிபர் செ.பத்மசீலன் விசேட விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.

இக்கண்காட்சியில், 248 மாணவர்களின் 1600 வர்ண படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இந்நிகழ்வின் தொடர் நிகழ்வாக சனிக்கிழமை(11) மாலை திருகோணமலை தமிழ் சங்கத்தின்  ஏற்பாட்டில் விவாதம், நடனம், கவியரங்கு, விலிலசை என்பன அரங்கேற்றப்பட்டன.

மாலை நிகழ்வுக்கு வவுனியா கல்வியில் கல்லூரி முன்னாள் பீடாதிபதி ச.அழகரெத்தினம், திருகோணமலை நகர முதல்வர் க.செல்வராசா உட்பட பலர் கலந்துகொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .