2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

பாரம்பரிய கலைகளின் சங்கமம்

Gavitha   / 2014 ஒக்டோபர் 12 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}



-கே.எல்.ரி.யுதாஜித்

இந்து கலாச்சார அலுவல்கள்  திணைக்களகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் நடைபெற்று வரும் பாரம்பரிய கலைகளின் சங்கமம் நிழ்வுகளின் இரண்டாம் நாள் கலை நிகழ்வுகள்  புதுக்குடியிருப்பு கண்ணகை அம்மன் ஆலய முன்றலில் சனிக்கிழமை (11) நடைபெற்றது.

இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர்  எம்.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை முன்னாள் தலைவர்களான பேராசிரியர் சி.மௌனகுரு, சிவயோகச்செல்வன், சிவஸ்ரீ சாம்பசிவ குருக்கள், மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன்,  இந்து கலாசார திணைக்களத்தின் ஆராய்ச்சி உத்தியோகஸ்தர் திருமதி தேவகுமாரி கஜன், மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் திருமதி எழில்வாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முனைக்காடு நாகசக்தி கலைக்கழகத்தின் பவளக்கொடி வடமோடிக்கூத்து, பொகவந்தலாவை மலையக கூத்தியல் கலைக்குழுவினரின் காமன்கூத்து, இணுவில் கந்தசாமி கோவில் இளம் தொண்டர் சபையின் இசை நாடகம் ஆகியன சனிக்கிழமை (11) இரவு நடைபெற்றன.
இரண்டாம் நாளன்று காலை நாவற்குடா கலாச்சார நிலையத்தில், முனைக்காடு நாகர சக்தி  கலைக்குழுவினரின் வசந்தன் கூத்தும் கலைஞர் கலந்துரையாடலும் நடைபெற்றன.

மூன்றாம் நாளான இன்று (12) நாவற்குடா இந்துகலாச்சார நிலையத்தில் கலைஞர் கலந்துரையாடலும், தேத்தாத்தீவு கிராமிய கழகத்தின்  வசந்தன் கூத்தும் இணுவில் கந்தசாமி கோயில் இளம் தொண்டர் சபையின் இசை நாடகம் போன்ற நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

மேலும், இந்துகலாச்சார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் சாந்தி நாவுக்கரசர் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பொகவந்தலாவ மலையக கூத்தியல் கலைக்குழுவினரின் காமன் கூத்தும், கலைஞர் கௌரவிப்பும் நடைnறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .