2025 ஜனவரி 14, செவ்வாய்க்கிழமை

கலாநிதி ஏ.எம்.ஏ.அஸீஸ் ஞாபகார்த்ததினம்

Thipaan   / 2014 ஒக்டோபர் 09 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலாநிதி ஏ.எம்.ஏ.அஸீஸ் ஞாபகார்த்ததினம், நாளை வெள்ளிக்கிழமை (10) பிற்பகல் 4.30 மணிக்கு கொழும்பு ஸாஹிராக் கல்லூரி கபூர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கலாநிதி அஸீஸ் மன்றத்தலைவர் எஸ்.எச்.எம்.ஜெமீல், வை.எம்.எம்.ஏ. பேரவைத் தேசியத் தலைவர் எம்.ரி.தாஸிம் ஆகியோர் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில், ஓய்வுபெற்ற வங்கியாளரும் இஸ்லாமிய நிதியியல் ஆலோசகருமான ஏ.ஐ.மரிக்கார் 'இஸ்லாமிய வங்கியியல் - நிதியியலில் ஒரு மாற்று வழி' என்றதலைப்பில் ஞாபகார்த்தஉரை நிகழ்த்தவுள்ளார்.

இந்நிகழ்வின்போது 'அறிவோர் பார்வையில் கலாநிதி எ.எம்.எ.அஸீஸ்' எனும் தமிழ் நூலும், மரினா இஸ்மயில் மற்றும் அலி அஸீஸினால் எழுதப்பட்ட 'யாழ்ப்பாணம் சோனகத்தெருவின் ஒரு பிரபலமான குடும்பம்' எனும் ஆங்கில நூலும் வெளியிடப்படவுள்ளன.

இலங்கையின் முதலாவது முஸ்லிம் சிவில் சேவை அதிகாரியான ஏ.எம்.ஏ.அஸீஸ், கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் அதிபரும் வை.எம்.எம்.ஏ. பேரவை, இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதியம் என்பவற்றின் ஸ்தாபகரும் செனட்டரும் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X