2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

உழைப்பால் உயர்ந்த மாமனிதர் கோசுப் போடியார் நூல்வெளியீடு

Gavitha   / 2014 ஒக்டோபர் 09 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா


மாவட்ட ஆயுர்வேத வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.காலித் தொகுத்து எழுதிய 'உழைப்பால் உயர்ந்த மாமனிதர் கோசுப் போடியார் அவர்களும் அவரது வழித் தோன்றல்களும்' எனும் நூல் வெளியீட்டு விழா புதன்கிழமை (08) இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீட கேட்போர் கூடத்தில், உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயீல் தலைமையில் நடைபெற்றது.

இவ்வைபவத்தில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட பிரதிச்செயலாளர் அஷ்ஷேய்க் எம்.ஐ.அமீர், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறை தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லா, சம்மாந்துறையின் பிரதம நம்பிக்கையாளர் டாக்டர் எம்.வை.எம். முஸ்தபா, முன்னாள் பிரதம நம்பிக்கையாளரும் கெப்சோ நிறுவனத்தின் பணிப்பாளருமான ஐ.ஏ.ஜப்பார் உட்பட கல்விமான்கள், உலமாக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது கோசுப் போடியாரின் பரம்பரையினர்களான, ஓய்வு பெற்ற முதுசங்கள் அதிபர் மணி எம்.ஐ.கோஸ்முஹம்மட், ஓய்வுபெற்ற கிராம சேவகரும் முன்னாள் பிரதம நம்பிக்கையாளருமான யூ.எம்.ஏ.கபூர், ஓய்வுபெற்ற தபாலதிபர் சுலைமாலெப்பை ஆகிய மூவர் நூலாசிரியர் மற்றும் விழாவின் தலைவர் ஆகியோரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .