2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

மிருதங்க அரங்கேற்றம்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 09 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


- வி.தபேந்திரன், நா.நவரத்தினராசா


யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் முதுகலைமாணி கணபதிப்பிள்ளை கஜனின் மாணவனும் அருமைநாதன் நிர்மலாதேவி தம்பதியினரின் புதல்வனுமாகிய, சண்முகப்பிரியனின் மிருதங்க அரங்கேற்ற நிகழ்வு இணுவில் கந்தசுவாமி கோவில் இளந்தொண்டர் சபை கலையரங்கில் புதன்கிழமை (08) இடம்பெற்றது.

அரங்கேற்றத்தின் போது இடம்பெற்ற இசையரங்கில் பாட்டு - இசைமாணி தவநாதன் றொபேட், மிருதங்கம் - அரங்கேற்ற கலைஞர் அ.சண்முகப்பிரியன், வயலின் - அ.ஜெயராமன், கடம் - நா.மாதவன், கஞ்சிரா – நா.சிவசுந்தரசர்மா, முகர்சிங் - சி.செந்தூரன், தம்புரா – க.ரஜீவன் ஆகியோர் பங்குகொண்டனர்.

இந்நிகழ்வில், இணுவில் கந்தசுவாமி கோவில் பிரதம குரு சிவஸ்ரீ ந.உருத்திரமூர்த்தி குருக்களின் ஆசியுரையையும் இசையாசிரியர் சி.சிவஞானராஜா வாழ்த்துரையையும், யாழ்.பல்கலைக்கழக மிருதங்க விரிவுரையாளர் நல்லை க.கண்ணதாஸ் மதிப்பீட்டுரையையும் வழங்கினர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .