2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

புத்தாக்க நொண்டி நாடகம்

Thipaan   / 2014 ஒக்டோபர் 08 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


பௌர்ணமி நிகழ்வு அமர்வு - 04ஐ முன்னிட்டு தென்மோடி இசையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட புத்தாக்க நொண்டி நாடகம் மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் இன்று புதன்கிழமை (08) அரங்கேறியது.

பரிகாசமும் கிண்டலும் அங்கதச் சுவையும் அறப் போதனைகளும் நிறைந்த இந்நாடகம் பேராசிரியர் மௌனகுருவின் நெறியாள்;கையில் மகுடம் கலை இலக்கிய வட்டத்தால் தயாரிக்கப்பட்டதாகும்.

52 வருடங்களுக்கு முன்பு பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களை கொண்டு பேராசிரியர் வித்தியானந்தன் இந்நாடகத்தை மேடையேற்றினார்.

கூத்தல்லாமல் கூத்தின் பாடல்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட புதிய ஆக்கம் ஒரு இசைக் கூத்து நாடகம்  என இயக்குனரும் பேராசிரியருமான  மௌனகுரு கூறினார்.

இந்த இசைக் கூத்து நாடகத்தை மகுடம் இலக்கிய வட்டம் சார்பில் மகுடம் ஆசிரியர் மைக்கல் கொலினின் தலைமையில் கிழக்கு பல்கலைக் கழக அழகியல் கற்கை நிறுவக மாணவர்களினால் அரங்கேற்றியமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மா. உதயகுமார், கிழக்கு பல்கலைக் கழக அழகியல் கற்கை நிறுவகப் பணிப்பாளர் கே. பிரேம்குமார், மண்முனை வடக்க பிரதேச செயலாளர் வெ. தவராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .