2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

மக்கள் கலை இலக்கிய விழா

Kogilavani   / 2014 ஒக்டோபர் 06 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்டச் செயலகமும் இணைந்து நடத்திய மாவட்ட மக்கள் கலை இலக்கிய விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வு திங்கட்கிழமை (06) கல்லடி துளசி மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வின்சன்ட் மகளிர் கல்லூரி மாணவிகளின் சுளகு நடனம், வேலூர் சக்தி வித்தியாலய மாணவர்களின் மக்கள் நடனம், கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களின் மக்கள் பாடல் நாடகம் உட்பட பல நிகழ்வுகள் இதன்போது இடம்பெற்றன.

இந்நிகழ்வில் கலைஞர் குணம் சவரிராஜா, மாஸ்டர் சிவலிங்கம், எழுத்தாளர் இந்திராணி புஸ்பராஜா மற்றும் ஊடகவியலாளர் ஏ.கங்காதரன் அகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .