2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

எரிகிடங்கைப் பயந்து கொள் நூல் வெளியீடு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 29 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஊடகவியலாளர் மூதூர் முறாசில் எழுதிய 'எரிகிடங்கைப் பயந்து கொள்!'   கவிதை நூல் வெளியீடு ஞாயிற்றுக்கிழமை(28)  மூதூர் அந்-நஹார் மகளிர் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

எழுத்தாளரும் கிழக்கு மாகாண சபைச் செயலாளருமான  எம்.சி.எம்.ஷரீப்   தலைமையில்  இடம்பெற்ற இந்நிகழ்வில் நூலின்; முதல் பிரதியை சமூக சேவையாளரும் மூதூர்  'திரிசீடி' அமைப்பின் தலைவருமான டாக்டர் கே.எம்.ஸாஹிர் பெற்றுக்கொண்டார்.

இதன்போது நூல் அறிமுகவுரையை கவிஞர் மூதூர் முகைதீனும் நூல் நயவுரையை கலாநிதி கே.எம்.எம்.இக்பாலும்  நிகழ்த்தினர்.

பிரதிக் கல்விப் பணிப்பாளர் அஷ;nஷய்க் எம்.எம்.ஜவாத் நளிமியின் சிறப்புரையும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில்  மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர், மூதூர் பிரதேசசபை தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ், மூதூர் பிரதேச சபை உறுப்பினர் பி.ரி.எம்.பைசர், எழுத்தாளர் ஏ.எஸ்.உபைதுல்லா(அதிபர்), அளவீட்டு சேவைகளினதும் உபகரணங்களினதும் பரீசோதகர் ஏ.எல்.நௌசாத், தொழில் அலுவலர் எஸ்.எம்.நசார், நன்நடத்தை பொறுப்பதிகாரி அஷ;nஷய்க் எம்.பி.எம்.நளீம் நத்வி   உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர். 







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .