2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

தமிழ் மாமன்றத்தின் விசேட விவாதப் பயிலரங்கு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 28 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


வவுனியா மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கான விசேட விவாதப் பயிலரங்கு சனிக்கிழமை(27) வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

கலை இலக்கிய ரீதியில் தனது காத்திரமான பங்களிப்பை ஆற்றிவரும் தமிழ் மாமன்றம் தனது இரண்டாவது வருட பயணத்தினுடைய ஆரம்ப செயற்பாடாக இதனை நடத்தியது.

இந்நிகழ்வில், கலாசார உத்தியோகத்தர் இரத்தினம் நித்தியானத்தன், தமிழாசிரியார் ஐ.கதிர்காமசேகரன், ஆசிரியர்கள், மாணவர்கள், தமிழ் மாமன்ற உறுப்பினர்கள், தமிழ் அ10ர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் தமிழ்மாமன்றம் பற்றிய ஓர் அறிமுகத்தையும் தமிழ் மாமன்றத்தின் கடந்து வந்த பாதை தொடர்பான விடயங்களையும் உறுப்பினர் கிருபானந்தகுமார் விளக்கி கூறினர்.

வன்னியின் வாதச்சமர் 2013 இல் காலிறுதிக்கு தெரிவான அணிகளுக்கான சான்றிதழ் மற்றும் பரிசில்கள் இதன்போது வழங்கப்பட்டன.
தொடர்ந்து, மாணவர்களுடைய பேச்சாற்றலை மதிப்பிடும் முகமாக 2 நிமிட பேச்சுக்கான தலைப்புகள் கொடுக்கப்பட்டு பேச்சாற்றல் மதிப்பிடப்பட்டது.

பேச்சாற்றல் தொடர்பான கருத்துரையை தமிழாசிரியர் ஐ.கதிர்காமசேகரன்; வழங்கினார்.  இதனைத் தொடர்ந்து மாணவர்களின்; கருத்து மோதல் இடம்பெற்றது.

இதனை தமிழ் மாமன்றத்தினுடைய இணைச் செயலாளர் கி.நிக்சலன் நடத்தினார். மாணவர்களின் வாதத் திறமையை வெளிக்கொணரும் வகையும் மிகவும் சுவரஷ்;யமாகவும் காரசாரமன விவாதங்களுடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.

மதிய இடைவேளையைத் தொடர்ந்து, சுழலும் சொற்போர் இடம்பெற்றது. மாணவர்களின் விவாதத் திறமையை மதிப்பிடும் முகமாக இந்நிகழ்வு அரங்கேறியது.

மாணவர்கள் தங்களுடைய காரசாரமான கருத்துக்களை முன்வைத்து சுழலும் சொற்போரை சொற்கணைகள் நிரம்பிய களமாக மாற்றினர்.

தொடர்ந்து விவாதம் இடம்பெற்றது. பயிலரங்கின் முழுமையான பயிற்சியின் வெளிப்பாடக  விவாதம் இடம்பெறறது. விவாத மேடையை தங்களுடைய ஆணித்தரமான கருத்துகளால் மாணவர்கள் அலங்கரித்தனர்.

இதனைத் தொடர்ந்து தமிழ் மாமன்றம் நடாத்த இருக்கின்ற வன்னியின் வாதச்சமர் 2014 இனுடைய உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சென்ற வருடம் வவுனியா மாவட்டத்துக்குள்  மட்டும் நடாத்தப்பட்ட இப்போட்டி இம்முறை வவுனியா, மன்னார், முல்லைத்தீவு என வன்னி மாவட்டங்கள் அனைத்தையும் உள்ளடக்கி மாபெரும் போட்டியாக நடாத்தப்படவுள்ளது.   


 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .