2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

சிறுவர் கூத்தரங்கு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 28 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


'சிறுவர்களை அவர்கள் வாழும் சூழலுடனும் அவர்களது சமூகத்துடனும் ஒன்றிணைய வைக்கும் கலைக்களமாக ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் கூத்தரங்கு மட்டக்களப்பு, சித்தாண்டி பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை(26) இரவு நடைபெற்றது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை மற்றும் பிரதேசத்திலுள்ள பாரம்பரிய கலை ஆர்வமுள்ள மக்களும் ஒன்றிணைந்து இக்கூத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தனர்.

துறைசார் சிஷே;ட விரிவுரையாளர் கலாநிதி சி.ஜெயசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வைக் கண்டுகழிக்க ஆயிரக்கணக்கான சிறுவர்கள் கலந்துகொண்டனர்.

'மழைப்பழம்'; எனும் கருப்பொருளில் இந்த சிறுவர் வடமோடிக்கூத்து அரங்கேற்றப்பட்டது.

மண்டபங்களுக்குள்ளும் அறைகளுக்குள்ளும் அடைக்கப்பட்ட நிலையில் கல்வி நடவடிக்கையும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் அமைக்கப்பட்டு சிறுவர்கள் வளத்தெடுக்கப்படுவது நடைமுறையாக இருந்துவருகின்றது.

மாண்;புகள், மகிமைகள் அறியாதவர்களாக சிறுவர்கள் வளர்வது யதார்த்தமாக இருக்கின்றது. தொழிற்சந்தைகளுக்கான உழைப்புச் சக்திகளைத் தயாரிப்பது தற்போதைய கல்வியின் நோக்கமாக தரந்தாழ்த்தப்படுகிறது.

எனவே இவ்வாறான நடைமுறைகளிலிருந்து மாறுபட்டு சிறுவர்களை சுயசிந்தனை மற்றும் படைப்பாற்றல்மிக்கவர்களாகவும்  சமூக எண்ணத்துடன் வாழ்பவர்களாகவும் உருவாக்கும் நோக்கத்துடன் இவ்வாறான கலைகலாசார நிகழ்ச்சிகள் ஏற்பாடுசெய்யப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .