2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

'நழுவி' கவிதை நூல் அறிமுக விழா

Kogilavani   / 2014 செப்டெம்பர் 23 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


கிராமத்தான் கலீபாவின் 'நழுவி' கவிதை நூல் அறிமுக விழா பொத்துவில் ஹிதாயாபுர கடற்கரை திறந்த வெளியரங்கில் திங்கட்கிழமை(22) நடைபெற்றது.

கவிஞர் கிண்ணியா அமீர் அலி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், திகாமடுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினர்.

தென்கிழக்குப் பிராந்தியத்தின் புகழ்பெற்ற எழுத்தாளனும், ஊடகவியலாளரும், நூற்றுக்குமேற்பட்ட புத்தக வெளியீடுகளில் கலந்து கொண்டு தனக்கென்றே ஓரிடம் பதித்துள்ள ஆசிரியர் ஜெஸ்மி மூஸாவினால் நூலின் ஆய்வுரை நிகத்தப்பட்டது.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் நழுவி நூலின் முதல் பிரதியை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீருக்கும் இரண்டாவது பிரதியை பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.ஏ.வாஸீத் ஆகியோருக்கு வழங்கி வைத்ததைத் தொடர்ந்து பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முஷர்ரத் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீhன் சேவையைப் பாராட்டி பொண்னாடை போர்த்தி கௌரவித்தார்.

இந்த நிகழ்வில் பொத்துவில் தவிசாளர் எம்.எஸ்.ஏ. வாஸீத், பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முஷர்ரத், எஸ்.ஏ.அஹமட் முகாசுதீன் சட்டத்தரணி ஆயோர் கௌரவிக்கப்பட்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .