2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

'சரித்திரம் கூறும் சம்மாந்துறை' நூல் வெளியீடு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 21 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சி.அன்சார், ஏ.ஜே.எம்.ஹனீபா


சம்மாந்துறை கலாபிவிருத்திக் கழகத்தின் ஏற்பாட்டில் ஓய்வுபெற்ற அதிபர் கலாபூஷணம் எஸ்.எச்.எம்.முஸ்தபா எழுதிய 'சரித்திரம் கூறும் சம்மாந்துறை வரலாற்று ஆய்வு நூல்' வெளியீட்டு விழா சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை(21) நடைபெற்றது.

நூல் ஆய்வினை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறைத் தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் நிகழ்த்தியதுடன், நூலின் முதற்பிரதியை நூலாசிரியமிடந்து சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை முன்னாள் தலைவர் ஐ.ஏ.ஜப்பார் பெற்றுக்கொண்டார்.

சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபைத்தலைவர் வைத்தியர் வை.எம்.எம்.முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,  தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில்,  சவூதி அரேபிய தூதரக வெகுசனத் தொடர்பு அதிகாரி ஐ.எல்.எம்.மாஹீர்,  சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட பிரதிச் செயலாளர் அஷ்ஷேஹ் எம்.ஐ.அமீர் நளீமி, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் கவிஞர் மன்சூர் ஏ காதிர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சம்மாந்துறை பிரதேசத்தின் ஆரம்பம் முதல் இன்று வரைக்குமான கலாசார பாரம்பரியங்கள் மற்றும் வரலாறுகளை உள்ளடக்கிய 250 பக்கங்களை கொண்ட இந்த நூலின் ஆய்வுரையை  இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட தமிழ்த்துறை விரிவுரையாளர் கலாநிதி றமீஸ் அப்துல்லா வழங்கினார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .