2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

'நதியைப் பாடும் நந்தவனங்கள்' வெளியீடு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 19 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


'நதியைப் பாடும் நந்தவனங்கள்' எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் தலைமையில் நடைபெறவுள்ளது.

மூத்த முஸ்லிம் அரசியல்; தலைமையும் 25 வருடங்களாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாக இருந்துவரும் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் 50ஆவது அகவையையொட்டி 50 கவிஞர்கள் இணைந்து இக்கவிதை தொகுதியை செய்துள்ளனர்.

மூத்த ஊடகவியலாளரும் சாஹித்திய மண்டல விருது பெற்ற கவிஞருமான ரீ.எல்.ஜவ்பர்கான் இதனைத் தொகுத்துள்ளார். கிழக்கு மண் பதிப்பகம் இதனை வெளியீடு செய்துள்ளது.

தென்னிந்திய கவிஞரும் இலக்கியவாதியுமான பேராசிரியர் முனைவா கவிமாமணி தி.மு.அப்துல் காதர் விசேட வருகையாளராக கலந்துகொள்ளவுள்ளார். நூலின் நயவுரைகளை கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்தா அழகியற்கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி கே.பிரேம்குமார், தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறைத்தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.
இந்த விழாவின்போது தென்னிந்திய பேராசிரியர் முனைவர் கவிமாமணி தி.மு.அப்துல் காதர் தலைமையில் 'நதியே...நீ பாடிக்கொண்டிரு..' எனும் தலைப்பில் கவியரங்கு இடம்பெறவுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .