2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

நர்த்தனாஞ்சலி நடன நிகழ்வு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 18 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா நகரசபை புதிய காலாசார மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலை கல்லூரி மாணவர்களின் நர்த்தனாஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளது.

யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் அனுசரணையுடன் மாலை 4.00 மணி முதல் 6.00 மணிவரை நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கல்லூரியின் சுமார் 100 மாவணவர்கள் நடன அளிக்கை செய்யவுள்ளனர்.

நிருத்திய நிகேதன நுண்கலை கல்லூரியானது 1995 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு  சாஸ்த்திரீய நடனம் மற்றும் இசை  வகுப்புகளை மாணவர்களுக்கு பயிற்றுவித்து வருகின்றது.

நிதி வசதியற்ற ஏழை மாணவர்களுக்கு இலவசமாக இசை, நடன வகுப்புகளை இக்கல்லூரி பயிற்றுவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .