2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

பொன்னாவரை கவிதை நூல் வெளியீடு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 15 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


சேனையூர் இரத்தினாவின் (இரத்தினசிங்கம் மத்திய கல்லூரி அதிபர்) பொன்னாவரை கவிதை நூல் வெளியீடு ஞாயிற்றுக்கிழமை(14)  மூதூர் கிழக்கு சேனையூர் மத்திய கல்லூரி மண்டபத்தில் கவிஞர்.வி.நவரத்னராஜர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, தலைமையுறையை நவரத்னராஜாவும்    நூலின் அறிமுக உரையை கவிஞர் மூதூர் முகைதீனும் நயவுரையை மலைமுரசு பத்திரிகையின் பிரதம ஆசிரியர் இரா.ஸ்ரீ.ஞாணேஸ்வரனும் ஆற்றினர். 

நூலின் முதல்பிரதியை  நூலாசிரியரிடமிருந்து முதன்மை அதிதியான துரைரெட்ணசிங்கம் பெற்றுக்கொண்டார்.

சிறப்பு பிரதியை ஊடகவியலாளர் முகுந்தனுக்கு நூலாசிரியர் வழங்கினார். இந்நிகழ்வின் போது பல்துறைசார் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .