2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண கூத்து விழா

Kogilavani   / 2014 செப்டெம்பர் 09 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்,க.ருத்திரன்

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்தும் கூத்துப் போட்டி நிகழ்வுகள் மற்றும் பரிசளிப்பு விழா என்பன 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தொடக்கம் 11 ஆம் திகதி வியாழன் வரை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது என மாவட்ட கலாசார இணைப்பாளர் ரீ.மலர்ச்செல்வன் அறிவித்துள்ளார்.

இன்றைய தினம் (9) மட்டக்களப்பு முனைக்காடு நாகதம்பிரான் ஆலய முன்றலில் மாவட்ட மட்ட போட்டியும் விழாவும் நடைபெறும்.

நாளை 10 ஆம் திகதி புதன்கிழமை கல்லடி பேச்சியம்மன் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய முன்றலில் மாகாண மட்டப் போட்டி விழா நடைபெறும்.

11 ஆம் திகதி வியாழக்கிழமை கிழக்கு மாகாண கூத்து விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெறும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .