2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

'உயிரி', 'காலம் ஆனவர்கள்' நூல்கள் வெளியீடு

George   / 2014 ஓகஸ்ட் 31 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


கைதடியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளரும் தற்போது பிரான்சில் வசிப்பவருமாகிய என்,கே.துரைசிங்கம் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா கைதடி நவீல்ட் பாடசாலை மண்டபத்தில் சனிக்கிழமை (30) இடம்பெற்றது.

கைதடி கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில் 'உயிரி' சிறுகதைத் தொகுதி, 'காலம் ஆனவர்கள்' கட்டுரைத் தொகுதி ஆகிய இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன.

ஆசியுரைகளை சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் சி.தங்கராசா, கைதடி முத்துக்குமாரசுவாமி மகாவித்தியாலய அதிபர் சி.பவளகுமாரன் ஆகியோர் நிகழ்த்தியதுடன், உயிரி நூலுக்கான வெளியீட்டுரையை ஓய்வுநிலை அதிபர் லயன் ப.செல்லத்துரையும், காலம் ஆனவர்கள் நூலுக்கான வெளியீட்டுரை வே.தபேந்தினுரனும் நிகழ்த்தினர்கள்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .