2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

'உம்மால் மட்டும் முடியும் இறைவா' இறுவெட்டு வெளியீடு

Thipaan   / 2014 ஓகஸ்ட் 31 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல மக்களுக்காக 1990ஆம் ஆண்டு உயிர் நீத்த அருட்பணி செல்வராஜா அடிகளாருக்கு, சொறிக்கல்முனை பங்கு மக்களால் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

இதனை நினைவுகூர்ந்து வெளியிடப்படும் 'உம்மால் மட்டும் முடியும் இறைவா'  எனும் இறுவெட்டு வெளியீட்டு விழா எதிர்வரும் புதன்கிழமை (2014.09.03) பிற்பகல் 4.30 மணிக்கு சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல வளாகத்தில் நடைபெறவுள்ளது.

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல பங்கு தந்தை அருட்பணி ஏ.யேசுதாசன் அடிகளார் தலைமையில் நடைபெறவுள்ள இவ் இறுவெட்டு வெளியீட்டு விழாவில் அரசியல் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர், மற்றும் உறுப்பினர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பிரதேச செயலாளர்கள், ஊடகவியலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .