2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

கலாசார பெருவிழா

George   / 2014 ஓகஸ்ட் 31 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கி.பகவான்,வி.விஜயவாசகன்


தென்மராட்சி பிரதேச கலாசாரப் பேரவையின் கலாசாரப் பெருவிழா, தென்மராட்சி கலாசார மண்டபத்தில், தென்மராட்சிப் பிரதேச செயலாளரும் கலாசாரப் பேரவைத் தலைவருமான திருமதி அஞ்சலிதேவி சாந்தசீலன் தலைமையில் சனிக்கிழமை (30) இடம்பெற்றது.

இந்நிகழ்வில், பிரதேச செயலக ரீதியில் நடத்தப்பட்ட கலை, இலக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன், பல்வேறு துறைகளில் பாண்டித்தியம் பெற்ற முதுபெரும் கலைஞர்கள் 13 பேருக்கு 'கலைச் சாகரம்' எனும் விருதுகளும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

அத்துடன் பேரவையினரால் வெளியிடப்பட்ட 'கலைச்சாரம்' என்னும் கைநூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்நூலை வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் வெளியிட்டு வைக்க யாழ். மாவட்ட  பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் திருமதி உ.சுபலிங்கம் முதற்பிரதியை பெற்றுக்கொண்டார். 






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .