2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

'தமிழன் தமிழனாக' கவிதை நூல் அறிமுக விழா

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 25 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் கவிஞருமான அம்பிலாந்துறையூர் அரியத்தின் 'தமிழன் தமிழனாக' கவிதை நூல் அறிமுக விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தின் தலைவரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு தொகுதிப் பொருளாளருமான இன்பராசா தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது கவிஞர்களால் தமிழன் தமிழனாக நேற்று, இன்று, நாளை என்ற தலைப்பில் கவியரங்கம் நிகழ்த்தப்பட்டது. பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனால் புதுக்குடியிருப்பு பிரதேச தொழிலதிபர் எஸ்.மாணிக்கராசாவுக்கு முதல் பிரதி கொடுத்து அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வருகை தந்திருந்த அதிதிகளுக்கு பிரதிகள் வழங்கப்பட்டன. பின்னர் கவிஞர் மதன் நூல் நயவுரை நிகழ்த்தினார். பின்னர் அதிதிகளின் உரைகளையடுத்து, கவிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அரியநேத்திரனால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டது.

இதற்கு முன்னர் இந்தத் தமிழன் தமிழனாக கவிதை நூலானது கடந்த 05ஆம் மாதம் 24ம் திகதி கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிகழ்வில் முதன்மை அதிதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்,  சிறப்பு அதிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.கருணாகரம் ஜனா, ஞா.கிருஸ்ணபிள்ளை, எம்.நடராஜா மற்றும் பலர்; கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .