2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

மொழிதல் ஆய்வு சஞ்சிகை வெளியீடு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 24 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்


மொழிதல் ஆய்வு சஞ்சிகையின் முதல் இதழ் வெளியீடு சனிக்கிழமை(23) மட்டக்களப்பு கல்லடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக  விபுலானந்தா கற்கைகள் நிறுவக மண்டபத்தில் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் கலாநிதி சி.சுந்திரசேகரத்தின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் பிடாதிபதி கலாநிதி க.இராஜேந்திரம், சுவாமி விபுலானந்தா கற்கைகள் நிறுகத்தின் பணிப்பாளர் கலாநிதி கே.பிறேம்குமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேஸ்வரி, த.கோபாலகிருஷ்ணன், முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண கலாசார உதவிப் பணிப்பாளர் கலாபூசணம் செ.ஏதிர்மன்னசிங்கம், கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் கவிஞருமான துரைராஜசிங்கம் ஆகியோருடன் கலை இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது அதிதிகளினால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டு பேராசிரியர் சி.மௌனகுருவினால் சஞ்சிகை ஆய்வுரை நிகழ்த்தப்பட்டது.


\



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .