2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

'தமிழன் தமிழனாக' கவிதை நூல் வெளியீடு

Super User   / 2014 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல் 


அம்பிளாந்துரையூர் அரியம் எழுதிய 'தமிழன் தமிழனாக' எனும் கவிதை நூல் அறிமுக விழா, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24) பி.ப. 3 மணிக்கு மட். புதுக்குடியிருப்பு கண்ணகி மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

கதிரவன் கலைக் கழகத் தலைவர் த.இன்பராச தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் வரவேற்பு உரையை இ.வரதராஜனும் நூலின் நயவுரையை கவிஞர்.ச.மதனும் நன்றியுரையை த.நாகராசாவும் நிகழ்த்தவுள்ளர்.

நூலின் முதற் பிரதியினை கே.மாணிக்கராசா பெற்றுக்கொள்ளவுள்ளார்.

இந்நிகழ்வில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கி.துரைராசசிங்கம், கோ.கருனாகரம், ஞா.கிஷ்ணபிள்ளை, மா.நடராசா, இரா.துரைரெத்தினம், பி.இந்திரகுமார் உட்பட பலர் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வின் போது, கவிஞர் எஸ்.பி.நாதன் தலைமையில் தமிழன் தமிழனாக நேற்று எனும் தலைப்பில் கவிஅரங்கு நடைபெறவுள்ளது.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .