2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

'மொழிதல்' ஆய்வுச் சஞ்சிகையின் முதலாவது இதழ் வெளியீடு

Thipaan   / 2014 ஓகஸ்ட் 16 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


'மொழிதல்' ஆய்வுச் சஞ்சிகையின் முதலாவது இதழ் வெளியீடும் ஆய்வுரையும்  மட்டக்களப்பு கல்லடி கிழக்குப் பல்கலைக்கழக, சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (23) காலை 9.30மணிக்கு இடம்பெறவுள்ளது.

கலாநிதி சி. சந்திரசேகரம் பிரதம ஆசிரியராகவும், சு. சிவரெத்தினம், கலாநிதி வ. இன்பமோகன் ஆகியோரை உதவி ஆசிரியர்களாகவும் கொண்ட இச்சஞ்சிகை கலை, இலக்கியம், சமூகம், பண்பாடு சார்ந்த ஆய்வுகள், உரையாடல்கள், விமர்சனங்கள், விவாதங்களுக்குத் தளமாக வெளிவர உள்ளது.

பிரதம ஆசிரியர் கலாநிதி சி. சந்திரசேகரம் தலைமையில் இடம்பெறும் வெளியீட்டு வைபவத்தில் கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட பீடாதிபதி கலாநிதி க. இராஜேந்திரம் பிரதம அதிதியாகவும் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி க. பிறேமகுமார் சிறப்பு அதிதியாகவும், கௌரவ அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர்களான அம்மன்கிளி முருகதாஸ், செ. யோகராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி க. தங்கேஸ்வரி, செங்கதிர் சஞ்சிகை ஆசிரியர் த. கோபாலகிருஷ்ணன், முன்னாள் வடக்கு, கிழக்கு மாகாண கலாசார உதவிப் பணிப்பாளர் கலாபூசணம் செ. ஏதிர்மன்னசிங்கம், ஆகியோரும் பங்குகொள்கின்றனர்.

சஞ்சிகை ஆய்வுரையைப்  பேராசிரியர் சி. மௌனகுரு ஆற்றுகின்றார்.. வரவேற்புரையை கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்
த. விவேகானந்தராசாவும் நன்றியுரையை சஞ்சிகையின் உதவி ஆசிரியர்களில் ஒருவரான கலாநிதி வ. இன்பமோகன் நிகழ்த்தவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .