2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

நாடக பட்டறைகள்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 15 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு, மேற்கு கல்வி வலயத்தின் அழகியல் மற்றும் முறைசாராக் கல்விப் பிரிவும் இணைந்து மண்முனை மேற்கு, உன்னிச்சை 8ஆம் கட்டை அ.த.க.பாடசாலையில் கிராமிய சமூதாய மறுமலர்ச்சிக்கான வேலைத்திட்டம் - 2014 கீழ் இடைவிலகல் மற்றும் அதனால் உருவாகும் பிரச்சினைகள் தொடர்பான செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

இச்செயற்திட்டமானது, இம்மாதம் 11ஆம் திகதி திங்கட்கிழமை, செவ்வாயக்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதில், உன்னிச்சை 8ஆம் கட்டை அ.த.க. பாடசாலை மாணவர்களின் கிராமங்களை உள்ளடக்கியதாக பாடசாலை இடைவிலகல், அதன்காரணமாக ஏற்படும் சமூக சீர்கேடுகள், பண்பாட்டுச் சிதைவுகள், கல்விப் பாதிப்புக்கள் தொடர்பாக இப்பிரதேசத்தில் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பான நாடகப்பட்டறைகள் நடத்தப்பட்டன.

மாணவர்கள் நாடகப் பயிற்சிப்பட்டறைகள் ஊடாக கட்டறுத்து, மனம் திறந்து தாம் எதிர்நோக்கும்; பிரச்சினைகளை தங்கள் கிராமத்திலேயே நாடகமாக நடித்துக் காட்டி கலந்துரையாடி முடிவெடுக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருந்தது.

இதன் இறுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை, உன்னிச்சை 8ஆம் கட்டை அ.த.க. பாடசாலையில், அறிவைத் தொலைக்காதே, அறிவைப் பறிக்காதே, இடைவிலகாதே, மதுவைத் தொடாதே, மதுவைத் தீண்டாதே, வாழ்வைத் தொலைக்காதே, கல்வியால் வாழ்வை வெற்றி கொள், நாளைய தலைவர்கள் நாமே, நமது பண்பாட்டை நமே பாதுகாப்போம் உள்ளிட்ட கருப்பொருளில் ஆற்றுகைகள் இடம்பெற்றன.

பாடசாலை மாணவர்களே இந்த ஆற்றுகைகளை நிகழ்த்தினர். இதனை மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய அழகியல் கல்விக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா நெறிப்படுத்தியிருந்தார்.

இறுதி ஆற்றுகை நிகழ்வினைக் காண அருகிலிருந்த கிராமங்களைச் சேர்ந்த பெருந்தொகை மக்கள் வருகை தந்திருந்தனர்.

இச் செயற்திட்டமானது, வலயக்கல்விப் பணிப்பாளர் கே.சத்தியநாதனின் வழிகாட்டலில், பிரதிக்கல்விப் பணிப்பாளர்(நிருவாகம்) ஜீ.சிறிநேசன் மேற்பார்வையில், பிரதிக்கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) எஸ்.மகேந்திரகுமாரின் ஆலோசனையின் கீழ் முறைசாராக்கல்விப் பணிப்பாளர் திருமதி ஆர்.கருணாநிதியினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

உன்னிச்சை 8ஆம் கட்டை அ.த.க.பாடசாலையின் அதிபர் விநாயகமூர்த்தி, நாடகமும் அரங்கியலும் பாடத்திற்குப் பொறுப்பான ஆசிரியை ரி.ஜெயவதனி ஆகியோர் இதற்கான ஒழுங்கமைப்பு வசதிகளை மேற்கொண்டிருந்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .