2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

பாரம்பரிய கலைசார் போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரல்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனிபா

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இவ்வருடத்திற்கான கலாசார விழாவினையொட்டி பாரம்பரிய கூத்து போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக மாகாண பணிப்பாளர் டபள்யு.எ.எல்.விக்ரம ஆரச்சி தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் அருகி வரும் பாரம்பரிய கூத்து கலையை வளர்த்தெடுக்கும் பொருட்டு இப்போட்டி நடைபெறவுள்ளன.

இதில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட கலை, இலக்கிய, நாடக மன்றங்கள் பங்பற்ற முடியுமென அறிவிக்கப்பட்டது.

மாவட்ட மட்டத்தில் 1ம், 2ம், 3ம், இடங்களைப் பெறும் கூத்துக்கள் மாகாண மட்டப்போட்டியில் பங்குபற்ற முடியும். மாகாண மட்டப்போட்டியில் 1ம், 2ம், 3ம், இடங்களைப்பெறும் கூத்துகளுக்கு விருதுகள், பணப்பரிசில்கள், சான்றிதழ்கள் என்பன வழங்கப்படும்.

வடமோடி, தென்மோடி, சிந்துநடை, வசந்தன், பறைமேள கூத்துகள் பங்குபற்றலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் அந்தந்த பிரிவுக்குட்பட்ட பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தகர்களுக்கு எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வருடத்திற்கான பிரதன கலாசார நிகழ்வுகள் திருகோணமலையில் நடைபெறவுள்ளதாக கலாசாரப் பணிப்பாளர் டபள்யு.எ.எல்.விக்ரம ஆரச்சி மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .