2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

நாடகப் பயிற்சிப் பட்டறை

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் தெல்லிப்பளைப் பிரதேச செயலக வழிகாட்டலில் புத்தாக்க அரங்க இயக்கத்தின் ஒழுங்குபடுத்தலில் நடாத்தப்படும் நாடகப்பயிற்சி பட்டறை எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக தெல்லிப்பளை பிரதேச செயலாளர் கே.ஸ்ரீமோகன் செவ்வாய்க்கிழமை (05) தெரிவித்தார்.

வலி.வடக்கு (தெல்லிப்பளை) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதி வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 2 மணி தொடக்கம் 5 மணிவரையில், 7, 8, 14, 15, 21, 22, 28, மற்றும் 29 ஆகிய திகதிகளில் இந்த நாடகப் பயிற்சிப்பட்டறை இடம்பெறவுள்ளதாகத் தெரிவித்தார்.

இப்பயிற்சிப்பட்டறையில் நடிப்பு, தலைமைத்துவம்,  எண்ணக்கருவாக்கம்,  தொடர்பாடற்திறன், நெறியாள்கை, வழிப்படுத்தல் ஆகிய நாடகத்துறைசார் விடயங்கள் பயிற்சியாக வழங்கப்படவுள்ளதாக அவர்  தெரிவித்தார்.

பயிற்ச்சிப்பட்டறையின் வளவாளர்களாக, புத்தாக்க அரங்க இயக்கத்தின் தலைவரும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி நாடகத்துறை ஆசிரியருமாகிய எஸ்.ரி.குமரன், புத்தாக்க அரங்க இயக்கத்தின் செயலாளரும் மானிப்பாய் இந்துக்கல்லூரி நாடகத்துறை ஆசிரியருமாகிய எஸ்.ரி.அருள்குமரன், நீர்கொழும்பு விஜயரட்ணம் மகாவித்தியாலய நாடகத்துறை ஆசிரியர் ச.முகுந்தன், இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலய ஆசிரியர் இரா.இதயராஸ், யாழ்ப்பாணப்பல்கலைக்கழக நாடகத்துறை சிறப்புப்பட்டதாரி இ.வினோதன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்தப் பயிற்சிப் பட்டறைக்காக தெல்லிப்பளை பிரதேச்தினைச் சேர்ந்த பாடசாலைகளில் தலா  உயர்தர வகுப்பு கற்கின்ற 10 மாணவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இப்பயிற்சிப்பட்டறை முடிவில் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .