2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

சமூகத்தை முன்கொண்டு செல்லும் பாரம்பரியமே எமக்கு தேவை: மௌனகுரு

Thipaan   / 2014 ஓகஸ்ட் 03 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.சுகிர்தகுமார் 


முற்போக்கான பாரம்பரியத்தை பாரம்பரியமாக கொண்டு புதிய தலைமுறையை உருவாக்குவோம். பாரம்பரியங்கள், பழமைகள் எல்லாம் எமக்கு அவசியமானவையல்ல. எப்பாரம்பரியங்கள் சமூகத்தை முன்;கொண்டு செல்லுகின்றதோ அதுமட்டுமே எமக்குத் தேவை என பேராசிரியர் சி.மௌனகுரு வெள்ளிக்கிழமை (01) தெரிவித்தார்.

திருக்கோவில் பிரதேசத்தில்;  ஆரம்பமான 4ஆவது கண்ணகி இலக்கிய விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இன்றைய சமூகத்தை மூன்று வகையான சுனாமிகள் தாக்கி வருவதாக குறிப்பிட்டார்.

ஜரோப்பிய நாகரீக மயமாக்கம், சமஸ்கிருத மயமாக்கம், இலத்திரனியல்; மயமாக்கம்  போன்ற மூன்றுமே அவை என்றார்.

ஜரோப்பிய நாடுகளில் நடைபெறுகின்ற கலாசாரங்களை பின்பற்றுதல் மூலம் ஜரோப்பிய நாகரீக மயமாக்கமும், இறைவனுக்கும் மக்களுக்கும் இடையே தரகர்களாக செயற்படுகின்றவர்களால் பிரயோகிகக்கப்படும் சமஸ்கிரக மந்திரங்களினால் சமஸ்கிருத மயமாக்கமும், நவீன இலத்திரனியல் கண்டுபிடிப்புகளால் உள்ளீர்க்கப்பட்டுவரும்  இலத்திரனியல் மயமாக்கல் மூலமும் சமூககலாசாரம் சீரழிக்கப்படுவதாக கூறினார்.

இன்றைய சந்ததிகளை பெற்றோர்கள் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாக உருவாக்க முயற்சிக்கின்றார்களே தவிர நல்ல மனிதர்களாக்க உருவாக்க தவறவிடுகின்றார்கள். அவர்களும் தொடர்ச்சியாக இயந்திரங்களோடு ஒன்றித்து வாழ்வதனால் மனிதர்களின் குணங்களில் இருந்து மாறுபட்டு இயந்திரங்களை போன்று செயற்படுகின்றார்கள். நவீனத்தின் நாளாந்த வளர்ச்சியால் மனிதம் என்பது மாண்டு செல்கின்றது என்றார். 

மேலும் நவீனத்தின் வளர்ச்சியால் மூன்று வகையில் சமூகம் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

முதலாவதாக, மணித்தியால வித்தியாசத்தில் உருவாக்கப்படும் புதிய புதிய உற்பத்திகளின் வருகையானது நவீனமே நவீனத்தை அழிப்பதாக மாற்றியுள்ளது என்றார்.

இரண்டாவதாக, பாலியல் உணர்வை தூண்டக்கூடிய இலத்திரனியல் சாதனங்களின் பயன்பாடுகள் இளைய சமுதாயத்தை பாதிப்பதாகவும், மூன்றாவதாக தொலைக்காட்சிகளில் இடம்பெறும் நிகழ்வுளை பார்த்து அதே போன்று மாறுவதன் மூலம் நிஜத்தை பொய் எனவும் போலியை மெய் எனவும் நம்பி மக்கள் மாறிவருவதாகவும் குறிப்பிட்டார்.

ஆகவே, பாரம்பரியங்கள் பழமைகள் எல்லாம் அழிந்து செல்லும் இக்காலகட்டத்தில் சமூகத்தை முன்கொண்டு செல்லக்கூடிய பாரம்பரியங்களை கடைப்பிடிப்பது காலத்தின் தேவை என்றார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .