2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

சந்தணக்காடு கவிதை நூல் வெளியீடு

Kogilavani   / 2014 ஜூலை 28 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்

கவிஞர் ஆ.மு.சி.வேலழகன் எழுதிய சந்தணக்காடு  எனும் கவிதை நூல் வெளியீடு திருப்பழுகாமம் மட்.கண்டுமணி மகாவித்தியாலத்தில்   ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்றது.

மட்.திருப்பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலய அதிபர் சு.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம்,  கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ரூபி வலன்றீனா, தொல்லியல் ஆய்வாளர் க.தங்கேஸ்வரி, மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் மேலாளர் ஓ.கே.குணநாதன், கதிரவன் சஞ்சிகையின் ஆசிரியர் த.இன்பராசா, கவிஞர் க.தணிகாசலம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

'சந்தணக்காடு'   கவிதை நூலின் நயவுரையினை கவிஞர் த.சேரலாதன் நிகழ்த்தினார்.

கவிஞர் ஆ.மு.சி.வேலழகன் எழுதிய 'வள்ளுவன் சொல்லே வாழும் நெறி' , 'உள்ளத்தனைய உயர்வு' , 'தொன்மை மிகு திராவிடர் நாகரீகம்' ஆகிய நூல்களும் இதன்போது அறிமுகம் செய்துவைக்கப்பட்டன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .