2024 நவம்பர் 02, சனிக்கிழமை

கர்நாடக சங்கீத வினாவிடைத் தொகுப்பு

Kogilavani   / 2014 ஜூலை 25 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடிவேல்-சக்திவேல் 


மட்டக்களப்பு, தேற்றத்தீவு தங்கராசா - வாகீசன் ஆசிரியரினால்  எழுதப்பட்ட கர்நாடக சங்கீத வினாவிடைத் தொகுப்பு நூல் வெளியீடு தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்தில் நேற்று வியாக்கிழமை (24) நடைபெற்றது.

தேனுகா கலைக் கழகத்தலைவர் த.விமலானந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் மு.விமலநாதன், உதவிக் கல்விப் பணிப்பாளர்(அழகியற் கல்வி) க.சுந்தரலிங்கம், பெரியகல்லாறு மத்திய கல்லூரி அதிபர் க.நல்லதம்பி, சங்கீத சேவைக்கால பயிற்சி ஆலோசகர் திருமதி. டே.இராஜகுமாரன் உட்பட கிராம பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, நூலின் அறிமுக உரையை சேவைக்கால பயிற்சி ஆலோசர் திருமதி. டே.இராஜகுமாரனும் நூலின் முதற்பிரதியினை நூலாசிரியரிடம் இருந்து பிரதிக் கல்விப் பணிப்பாளர் மு.விமலநாதனும் பெற்றுக் கொண்டனர். சிறப்பு பிரதிகளை இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் பொற்றுக் கொண்டனர்.

இந் நூலனாது உயர்தரத்தில்  சங்கீதப்பாடம் கற்கும் மாணவர்களுக்கு உகந்ததாக அமைக்கப் பட்டுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .