2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பாசுபதம் வடமோடி கூத்து நாளை

Kogilavani   / 2014 ஜூலை 07 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன்

மட்டக்களப்பு நாவலடி கடலாச்சி அம்மன் ஆலய வளாகத்தில் பாசுபதம் வடமோடி நாட்டுக் கூத்து நாளை (8) இரவூ 8 மணிக்கு அரங்கேற்றப்படுகிறது.

ஆசிரியர் நா.சிவலிங்கேஸ்வரன் தலைமையில் நடைபெறும் இதன் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறைத்தலைவர் கலாநிதி சி.ஜெயசங்கர், சிறப்பு அதிதிகளாக மண்முனை வடக்கு கலாசார உத்தியோகத்தர் எம்.சதாகரன், கலைக்கோட்டன் அ.இருதயநாதன், கலாபூசணம் தேனூரான் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

அத்துடன், கௌரவ அதிதிகளாக மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கர் எம்.அரசரெட்ணம், கடலாச்சியம்மன் ஆலய பிரதம குரு எஸ்.லிங்கேஸ்வரன், கடலாச்சியம்மன் ஆலய பரிபாலன சபைத் தலைவர் எஸ்.வயிரமுத்து ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.

பாசுபதம் கூத்தின் அண்ணாவிமார்களாக சே.தம்பிமுத்து, இ.தருமராசா, ந.சந்திரசேகரம், ஏட்டு அண்ணாவிமாராக ச.அழகுசுந்தரனம், க.அருள்நாதன் ஆகியோர் உள்ளதுடன், உடை அலங்காரத்தை கரவெட்டி செ.வேலுப்பிள்ளையூம், நெறியாள்கையை கலாபாரதி நா.ஈஸ்பரன் ஆசிரியரும், அனுசரணையை அவூஸ்திரேலிய நாட்டிலுள்ள ஞா.உதயனும் மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .