2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மாற்றுத்திறனாளிகள் சமுகத்தில் ஒருவர் வீதி நாடகம்

Kogilavani   / 2014 ஜூன் 25 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


'மாற்றுத்திறனாளிகள் சமுகத்தில் ஒருவர்' எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வு வீதிநாடகம் புதன்கிழமை(25) கோறளைப்பற்று பிரதேச செலகப் பிரிவில் இடம்பெற்றது.

ஹெமிட் நிறுவனத்தின் அனுசரணையில் வாழைச்சேனை வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் அழைப்பின் பேரில் கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் பிரதேச செயலகம், வாழைச்சேனை இந்துக் கல்லூரி மற்றும் கல்மடு கிராமம் ஆகிய மூன்று இடங்களில் இவ் விழிப்புணர்வு வீதி நாடகம் இடம்பெற்றது.

வாழைச்சேனை பிரதேச செயலக சமுக சேவைகள் உத்தியோகஸ்த்தர் ஏ.நஜீம் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ் கலந்துகொண்டார்.

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கதிரவன் கலாமன்ற அங்கத்தவர்களின் பங்களிப்புடன் இன்பராஜின் நெறியாழ்க்கையில் இவ் வீதிநாடகம் இடம்பெற்றது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .