2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

எனக்குப் பிடித்த படைப்பு

Kogilavani   / 2014 ஜூன் 23 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எஸ்.குகன்


உயில் கலை இலக்கிய சங்கத்தின் 15 ஆவது நிகழ்வாக 'எனக்குப் பிடித்த படைப்பு – வாசகர் அனுபவம்' என்னும் இலக்கிய அனுபவப் பகிர்வு வதிரி மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்றது.

கவிஞர் ந.மயூரரூபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தானாவிஷ;ணு, எஸ்போஸின் ஆகியோரின் 'சூரியனைக் கவர்ந்து சென்ற மிருகம்' என்ற கவிதை பற்றியும் சி.விமலன், அ.ரவி ஆகியோரின் 'வாணியின் வீடு' சிறுகதை பற்றியும் யாத்திரிகனின் 'கருணாகரனின் - துப்பாக்கியின் தியானத்தில்' கவிதை பற்றியும், சித்திராதன் தேவாவின் மொழிபெயர்ப்பில் வந்த 'குழந்தைப் போராளி' என்ற நாவல் பற்றியும், சு.குணேஸ்வரன் செ.சுதர்சன் ஆகியோரின் 'சிங்கம் தின்ற நிலம் பற்றிய கவிதைகள்' பற்றியும் தமது வாசக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.

இதன்போது, உரைகளின் நடுவிலும் இறுதியிலும் கருத்துப் பகிர்வுகளும் இடம்பெற்றன.

கருத்துப் பகிர்வினை சி.சின்னராஜன், பொலிகையூர் எஸ்.குமாரதீபன், இ.சு.முரளிதரன், மா.கிருஷ;ணகாந்தன், ம.அனந்தராசன் ஆகியோர் மேற்கொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .