2024 நவம்பர் 02, சனிக்கிழமை

கிராமிய கலை பண்பாட்டுப் பெருவிழா

Kanagaraj   / 2014 ஜூன் 22 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


- வி.தபேந்திரன், செல்வநாயகம் கபிலன்

அச்சுவேலி கலை பண்பாட்டு மன்றத்தின் ஏற்பாட்டில் கிராமிய கலை பண்பாட்டுப் பெருவிழா சனிக்கிழமை அச்சுவேலி இராஜமாணிக்கம் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்வு கலை பண்பாட்டு மன்றத்தின்  தலைவரும் தென்மராட்சிக் கல்வி வலயப் பிரதி கல்விப் பணிப்பாளருமாகிய வே.பாலசுப்பிரமணியம் தலைமையில்  இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வில்லிசைக் கலைஞர் சின்னமணி நா.கணபதிப்பிள்ளை, ஓவியக் கலைஞர் ஆசை இராசையா, சங்கீத கலாபூஷணம் வ.செல்லத்துரை ஆகியோருக்கு 'அச்சூர்க்குரிசில்' என்னும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

 இந்நிகழ்வையொட்டி அச்சுவேலி பிரதேச மாணவர்களிடையே நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகளுக்கான பரிசளிப்பும், பிரதேச கலைஞர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

தொடர்ந்து, அச்சுவேலிப் பிரதேசத்தின் பெருமைகளையும் வரலாற்றையும் எடுத்தியம்பும் வகையில் தயாரிக்கப்பட்ட 'அச்சூரமுதம்' என்ற நூலும் 'கீற்றின் காற்று' என்ற இறுவட்டும் வெளியிட்டு வைக்கப்பட்டன.
 
சிறப்பு நிகழ்வாக யாழ்.நாட்டார் வழக்கியல் கழகத்தினரின் சத்தியவான் சாவித்திரி இசை நாடகம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடப் பீடாதிபதி பேராசிரியர் தி.வேல்நம்பி, கோப்பாய் பிரதேச செயலர் ம.பிரதீபன், தெல்லிப்பழை பிரதேச செயலர் க.ஸ்ரீமோகனன், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் சு.முரளிதரன், வட மாகாணப் பாடசாலை வேலைகள் பணிப்பாளர் எந்திரி க.குகனேசன், கோப்பாய் உதவிப் பிரதேச செயலர் ச.பிரேமினி, கலாசார உத்தியோகத்தர் றோ.மிலாசினி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .