2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

கலைக் கண்காட்சி

Kogilavani   / 2014 ஜூன் 11 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆர்.ரஞ்ஜன்


கின்னஸ் சாதனைக்கு உரிமையுடைய இலங்கை அரசின் பல விருதுகள் பெற்ற 3.5 மில்லி மீற்றர் உயரம் கொண்ட உலகின் மிகச்சிறிய புத்தர்சிலை மற்றும் 1 சென்ரி மீற்றர் உயரம் கொண்ட உலகின் மிகச்சிறிய விநாயகர் சிலை என்பவற்றுடன் இன்னும் பல கலைப்படைப்புக்கலைக் கொண்ட கலைக் காண்காட்சி ஒன்று புதன்கிழமை ஹட்டன் ஹட்டன் நிக்ரோதாராம விகாரையில் ஆரம்பிக்கப்பட்டது.

ஹட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் ஆசிரியர் அமித் மாநாக நெவில் குமார என்வரால் படைக்கப்பட்ட பல்வேறு கலைப்படைப்புகளைக் கொண்டதாக இக்கண்காட்சி இடம்பெறுகின்றது.  

தையல் ஊசியின் உதவியுடனே தாம் இந்த படைப்புகளை படைத்தாக தெரிவிக்கும் ஆசிரியர், இந்த படைப்புகள் ஒவ்வொன்றையும் செய்வதற்கு தமக்கு இரண்டு மணித்தியாலங்கள் சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த படைப்புகளை வெறும் கண்களால் துள்ளியமாக பார்வையிடுவது கடினமாக உள்ளது. எனினும் தாம் இந்த படைப்புகளை வெறும் கண்களால் பார்த்தே செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தான் உலக கின்னஸ் சாதனைக்கு இதனை சமர்ப்பித்துள்ளதாகவும் தமக்கு பல அரச விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த கண்காட்சி 13ஆம் திகதி வெள்ளிக்கிழைமை வரை நடைபெற உள்ளதுடன் இதில் பல்வேறு கலைப் படைப்புகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X