2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

வீதிநாடகம்

Kogilavani   / 2014 மே 30 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக தொடர்பாடல் துறை மாணவர்களின் வீதிநாடகமொன்று திருகோணமலை நகரப்பகுதியில் செவ்வாய்க்கிழமையன்று (27) மாலை நடைபெற்றது.

இந்நாடகத்தில், மூவின மக்களின் கலை வடிவங்களும் உள்ளடக்கப்பட்டிரந்தன.

கல்விப்புலத்தில் பிரத்தியேக வகுப்புக்கள் மூலம் தமது சிறுபராய மகிழ்ச்சியைத் தொலைக்கும் சிறுவர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தனிமனித ஆளுமையில் உருவாக்கும் உளப்பாதிப்புக்கள், சீதன முறைமையினால் உருவாகும் குடும்பச் சிக்கல்கள் ஆகியன இந்த வீதி நாடகங்களின் கருப்பொருட்களாக அமைந்திருந்தன.

தொடர்பாடற்துறை சிரேஷ;ட விரிவுரையாளர் கலாநிதி சி.ரகுராமின் வழிநடத்தலில், விரிவுரையாளர்கள் சிவப்பிரியா சக்திலிங்கம், ஷhலிகா போயாகொட, நிசன்சலா ஜெயவர்த்தன ஆகியோர் இந்நிகழ்வை ஒழுங்கமைத்திருந்தனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X