2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

மாணவர்களின் ஓவியக் கண்காட்சி

Kogilavani   / 2014 மே 26 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.குகன்

திருநெல்வேலி சைவ வித்தியாவிருத்திச் சங்கத்தின் சைவச்சிறார் இல்ல மாணவர்களின்  ஓவியக்கண்காட்சி சங்க கற்றல் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) ஆரம்பமாகியது.

மேற்படி கண்காட்சி நாளை செவ்வாய்க்கிழமை (27) வரையும் இடம்பெறவுள்ளது.

சைவவித்திய விருத்திச்சங்க தலைவர் கவிஞர் சோ.பத்மநாதன் தலைமையில் ஆரம்பமான இந்தக் கண்காட்சி ஓவியக் கூடத்தினை ஓய்வுநிலை சித்திரபாட உதவிககல்விப்பணிப்பாளர் ஓவியர் வை.சுப்பிரமணியம் (ரமணி) திறந்து வைத்தார்.

ஓவியக் கண்காட்சிக்கான ஒழுங்கமைப்பினை சித்திரபாட ஆசிரியர் அ.ஜெயந்தன் மேற்கொண்டிருந்தார்.

ஓவியக்கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் ஓவியர் ஆ.இராசையா, யாழ்ப்பாணப்பல்கலைக்கழக இந்து நாகரீகத்துறை விரிவுரையார் தி.செல்வமனோகரன், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X