2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

அக்கரைப்பச்சை கவிதை தொகுதி வெளியீடு

Kogilavani   / 2014 மே 26 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


கவிஞரும் பாடலாசிரியருமான சல்மான் வஹாபின் 'அக்கரைப்பச்சை' கவிதைத் தொகுதி வெளியீடு ஞாயிற்றுக்கிழமை வாழைச்சேனை அந்நூர் தேசிய கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலக பதில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கே.றகுமான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகான சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார்.

கவிதைத் தொகுப்பின் விமர்சன உரையை கவிஞரும் மட்டக்களப்பு முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத் தலைவருமான ரீ.எல்.ஜவ்பர்கான் நடத்தியதுடன் கவிதைத் தொகுப்பு பற்றிய கருத்துரையை கவிஞர் மருதமுனை ஜமீல் நடத்தினார்.

முதற் பிரதியை நூலாசிரியர் பிரதம அதிதிக்கு வழங்கியதுடன் பிரதம அதிதி ஏனையவர்களுக்கான பிரதிகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாடிச்சேனை அல் இக்பால் வித்தியாலய மாணவிகளின் கலை நிகழ்சிகளும் இடம்பெற்றன.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X