2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

கவிதைப் பட்டறை

Kogilavani   / 2014 மே 25 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன்


யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும் இணைந்து நடத்திய தமிழ்க் கவிதை மரபும் மாற்றமும் என்ற தொனிப்பொருளில் அமைந்த கவிதைப்பட்டறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்றது.

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத் தலைவரும் யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடப் பீடாதிபதியுமாகிய பேராசிரியர் தி.வேல்நம்பியின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வாழ்த்துரையை யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் வி.பி.சிவநாதனும், கவிதைப் பட்டறைக்கான திறப்புரையை நிகழ்வின் பிரதம ஏற்பாட்டாளரும் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்க உப தலைவரும் யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவருமாகிய பேராசிரியர் கி.விசாகரூபனும் நிகழ்த்தினார்கள்.

தமிழ்க் கவிதை அன்றும் இன்றும் என்ற தொனிப் பொருளில் தமிழ்த்துறை சிரேஷ;ட விரிவுரையாளர் ஈ.குமரனும் படைப்பாளி நோக்கில் தமிழ்க் கவிதை என்ற தொனிப் பொருளில் கவிஞர் த.ஜெயசீலனும் மரபும் கவிதையும் என்ற பொருளில் பலாலி ஆசிரிய கலாசாலையின் முன்னாள் அதிபர் கவிஞர் சோ.பத்மநாதனும் கவிதை இரசனையும் திறனாய்வும் என்ற பொருளில் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜாவும்  நவீன தமிழ்க் கவிதை– உருவமும் உணர்த்துமுறையும் என்ற பொருளில் தமிழ்த்துறை சிரேஷ;ட விரிவுரையாளர் க.அருந்தாகரனும் கருத்துரைகளை வழங்கினர்.

நிகழ்வின் நிறைவில் கவிதைப் பட்டறையில் கலந்துகொண்டவர்களிடையே கவிதைப் போட்டி ஒன்றும் நடத்தப்பட்டது.
இந்தப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள் தமிழ்ச்சங்கத்தால் அளவெட்டியில் நடத்தப்படவுள்ள மகாகவி உருத்திரமூர்த்தி நினைவுப் பெருவிழாவில் வைத்து வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் 250 இற்கும் மேற்பட்ட பாடசாலை ஆசிரியர்களும், மாணவர்களும், கவிதை ஆர்வலர்களும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X