2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

வண்ணத்துப் பூச்சி சிறுவர் சமாதான பூங்கா

Kogilavani   / 2014 மே 25 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள வண்ணத்துப் பூச்சி சிறுவர் சமாதானப் பூங்காவின் 18 ஆவது குழுச் சிறார்களின் வானவில் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை(25) பிள்ளையாரடியிலுள்ள புதிய வண்ணத்துப் பூச்சி சிறுவர் சமாதானப் பூங்காவில் இடம்பெற்றது.

இதன்போது, சிறுவர்கள் மற்றும் வண்ணத்துப்பூச்சி சிறுவர் சமாதானப் பூங்கா கலைக்குழு ஊக்குவிப்பாளர்கள் ஆகியோரால் கருத்தாழமிக்க விழிப்புணர்வூட்டும் கூத்து, நாடகம், கதைகள், பாட்டு என்பன இடம்பெற்றன.

மனிதநேயம், இயற்கை வளங்களை அழிவுறச் செய்யாமல் இயற்கையோடு இணைந்து வாழ்தல், வேற்றுமையை நீக்கி ஒற்றுமையோடு வாழும் சமூக ஒப்புரவு என்பனவற்றைப் பிரதிபலிப்பதாக இந்த நிகழ்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

வண்ணத்துப்பூச்சி சிறுவர் சமாதானப்பூங்கா பணிப்பாளர் அடிகளார் போல் சற்குணநாயகம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் வண்ணத்துப்பூச்சி சிறுவர் சமாதானப்பூங்காவின் நிறுவுனர் போல் ஹோகன், ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதர் உட்பட இன்னும் கல்வித் திணைக்கள அதிகாரிகள், பெற்றோர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கடந்தகால யுத்தத்தின் காரணமாக மனக்காயங்களுக்குள்ளான தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த சுமார் 15 ஆயிரம் சிறார்கள் கடந்த 18 வருட காலத்தில் வண்ணத்துப்பூச்சி சிறுவர் சமாதானப் பூங்காவில் அவர்களது மன வடுக்களை ஆற்றுப்படுத்துவதற்கான விளையாட்டு செயற்பாடுகளுடன் கூடிய நிகழ்ச்சிகளில் பங்குபற்றியிருப்பதாக வண்ணத்துப்பூச்சி சிறுவர் சமாதானப் பூங்கா பணிப்பாளர் சபை உறுப்பினரும் அதன் நிறுவுனர்களில் ஒருவருமான ஏ.எச்.ஏ.ஹுஸைன் தெரிவித்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X