2024 நவம்பர் 02, சனிக்கிழமை

வலம்புரி கவிதா வட்டத்தின் பௌர்ணமி கவியரங்கு

Kogilavani   / 2014 மே 19 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


வலம்புரி கவிதா வட்டத்தின் 5 ஆவது பௌர்ணமி கவியரங்கு கடந்த   புதன்கிழமை (14)  கொழும்பு 12 அல் ஹிக்மா கல்லூரியில் காலை 10.30 க்கு நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக பிரபல திறனாய்வாளர்  கே.எஸ்.சிவகுமாரன் கலந்துகொண்டார்.

வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைனின் ஆரம்ப உரையுடன் தொடங்கிய இந்நிகழ்வில், செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

காத்திபுல் ஹக் கலாபூஷணம் எஸ்.ஐ.நாகூர் கனி தலைமையில் நiபெற்ற இக்கவியரங்கில் கவிஞர்கள் மேமன்கவி, பிரேம்ராஜ், ஏ.எஸ்.எம்.நவாஸ், ரஷீத் எம். றியாழ், மட்டக்களப்பு லோகநாதன், பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் பயிலும் ருசைக்கா கனி, வதிரி சீ.ரவீந்திரன், இளநெஞ்சன் முர்ஷிதீன், எம்.ஏ.எம்.ஆறுமுகம், நாச்சியாதீவு பாத்திமா ரினோஸா, சமூக ஜோதி எம்.ஏ.ரஃபீக், சட்டத்தரணி ரஷீத் எம்.இம்தியாஸ், நாச்சியாதீவு பர்வீன், கலையழகி வரதராணி, கவிநேசன் நவாஸ், ஈழ கணேஷ், முல்லை முஸ்ரிஃபா ஆகியோர் கவிதை வாசித்தனர்.
மின்னஞ்சலில் அனுப்பிவைக்கப்பட்ட கவிஞர் எம்.வை.எம்.மீஆதின் கவிதையும் இதன்போது வாசிக்கப்பட்டது.

பிரதம அதிதியாக கலந்து கொண்ட கே.எஸ்.சிவகுமாரன் தற்போதைய கவிதைப் போக்கு பற்றிய தனது மனப் பதிவினை முன்வைத்தார். 'காப்பியக்கோ' டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் கருத்துரை வழங்கினார்.

ஜூன் மாத வகவ கவியரங்கு தலைவராக கவிஞர் எம்.ஏ.எம்.ஆறுமுகம் அறிவிக்கப்பட்டார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .