2024 நவம்பர் 02, சனிக்கிழமை

'தமிழன் தமிழனாக' கவிதை நூல் வெளியீட்டு விழா

Kanagaraj   / 2014 மே 17 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அம்பிளாந்துறையூர் கவிஞர் பா.அரியம்  எழுதிய 'தமிழன் தமிழனாக' எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை 24ஆம் திகதி காலை 9 மணிக்கு கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய ஒன்றியத்தின் தலைவர் த.மேகராசர் தலைமையில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்வில் வாழ்த்துக் கவியினை தேசிய கல்விக் கல்லூரி நிறுவகத்தின் சிரேஸ்ட்ட விரிவரையாளர் முருகு தயாநிதி நிகழ்த்தவுள்ளார்.

நயவுரையினை கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் திருமதி.ரூபி வலன்றீனா பிரான்சிஸ் நிகழ்த்தவுள்ள அதேவேளை முதற் பிரதியினை மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் இயக்குனர் நாயகம் வி.ரஞ்சிதமூர்த்தி பெறவுள்ளார்.

மேலும் படுவான்கரை மண்ணின் மகத்துவம் தொடர்பான பாடல் வெளியீடும், தமிழ் மொழிவாழ்த்து, தமிழ் வணக்கப் பாடல் போன்றனவும் இந்நிகழ்வில் இடம்பெறவள்ளதாக பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய ஒன்றியத்தின் செயலாளர் மு.சுதர்ஷினி தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் பிரதம குரு சிவ ஸ்ரீ. சோதிலிங்கக் குருக்கள், ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பொன்னையா-சுவர்ணராஜா, மட்டக்களப்பு  மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன், மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஞா.ஸ்ரீநேசன், கோட்டக் கல்விப் பணிப்பாளர் த.தயாசீலன், மட்டக்களப்பு கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன், மண்முனை தென்மேற்கு பிரதேச சபை செயலாளர் ந.கிருஷ்ணபிள்ளை, மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள், அரச, அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .