2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

திருவள்ளுவர் சிலை திறப்பும் கலைமலர் நூல் வெளியீடும்

Super User   / 2014 மே 13 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.குகன்


கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவும் கலைமலர் நூல் வெளியீட்டு நிகழ்வும் கலாசாலையின் ரதிலக்ஷமி மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை (12) இடம்பெற்றது.

கலைமலர் இதழாசிரியர் ச.மேகன்ராஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருவள்ளுவர் சிலையினை கலாசாலை முதல்வர் திரு.வே.கா.கணபதிப்பிள்ளை திறந்து வைத்தார்.

இந்த திருவள்ளுவர் சிலையினை சிற்பாச்சாரியார் க.சிவப்பிரகாசம் வடிவமைத்திருந்தார்.

தொடர்ந்து நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில், வெளியீட்டுரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறைத்தலைவர் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி த.கலாமணியும், மதிப்பீட்டுரையினை  கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை ஓய்வுநிலை பிரதி அதிபர் பண்டிதர் கலாநிதி  செ.திருநாவுக்கரசுவும் நிகழ்த்தினர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X