2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

உலக நடன தின நிகழ்வு

Super User   / 2014 ஏப்ரல் 29 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா

 
கலை கலாச்சார அலுவல்கள் அமைச்சும் யாழ். மாவட்டச் செயலகமும் இணைந்து நடத்திய உலக நடன தின நிகழ்வுகள் வீரசிங்கம் மண்படத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (29) நடைபெறுகின்றது.
இந்த உலக நடன தினம் யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக நடைபெறுகின்றது.

கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் ரி.பி.ஏக்கநாயக்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில், கண்டிய நடனத்துடன் நடன நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இந்நிகழ்வில் நடன மாணவிகளின் நடன நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், மூத்த கலைஞர்கள் மூவருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

'இலக்கியம்' என்ற நூல் ஒன்றை அமைச்சர் ரி.பி.ஏக்கநாயக்கா, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா இணைந்து வெளியிட்டு வைத்தனர்.

இந்நிகழ்வில், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ்.மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X