2024 நவம்பர் 02, சனிக்கிழமை

'இலங்கையில் கண்ணகி வழிபாடு' புகைப்படக் கண்காட்சி

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 29 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


'இலங்கையில் கண்ணகி வழிபாடு' தொடர்பான புகைப்படக் கண்காட்சி கிழக்கு பல்கலைக்கழக புதிய கட்டிடத்திலுள்ள கலை, கலாசார பீடத்தில் நடைபெற்றுவருகின்றது.

இந்துநாகரிக கற்கைகள் பிரிவின் தலைவர் சாந்தி கேசவன் தலைமையில் திங்கட்கிழமை (28)  ஆரம்பமான இக்கண்காட்சி புதன்கிழமை (30) வரை நடைபெறவுள்ளது. 

இந்நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கிட்ணன் கோவிந்தராஜா பிரதம அதிதியாகவும் கலை, கலாசார பீடாதிபதி ஏ.இராஜேந்திரம் விசேட அதிதியாகவும்   ஓய்வுபெற்ற பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு கௌரவ அதிதியாகவும் மற்றும் பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

பௌத்த மற்றும் இந்துமத வழிபாடுகளில் ஒருமைப்பாட்டையும் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தும் ஆலயங்களில் எடுக்கப்பட்ட நிகழ்வுகளை கலைஞரான கலாநிதி சார்னி ஜெயவர்த்தன, புகைப்படப்பிடிப்பாளர் மாலதி டி அல்விஸ் ஆகியோர் காட்சிப்படுத்தியுள்ளனர்.
இந்துநாகரிக கற்கைகள் புலம், கலை, கலாசார பீடத்தினால்  இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
 





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .