2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

வீசு தென்றல் விருது வழங்கும் நிகழ்வு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 26 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்,-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பில் இருந்து வெளிவரும் தென்றல் சஞ்சிகையின் 25வது சிறப்பு மலர் வெளியீடும் தென்றல் சஞ்சிகையின் வீசுதென்றல் விருது வழங்கும் நிகழ்வும் இன்று(26) மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

தென்றல் சஞ்சிகையின் ஆசிரியர் க.கிருபாகரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மனோகரன் கலந்துகொண்டதுடன் சிறப்பு விருந்தினராக இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் சிரேஸ்ட தயாரிப்பாளர் எஸ்.மோசேஸ் கலந்துகொண்டார்.

25 வது சிறப்பு மலரின் முதல் பிரதியினை மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் பொருளாளர் இ.றஞ்சிதமூர்த்தி பெற்றுக்கொண்டதுடன் 25வது சிறப்பு மலர் அறிமுக உரையினை கிழக்குப் பல்கலைக் கழக மொழித்துறை தலைவர் திருமதி றூபி வலன்ரினா பிரான்சிஸ் வழங்கினார்.

தொடர்ந்து வீசுதென்றல் விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது தொல்பியல் ஆய்வாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் தேசிய இணைப்பாளருமாகிய செல்விக.தங்கேஸ்வரி, கொழும்பைச் சேர்ந்த எழுத்தாளர் பா.வயிரவநாதன், கல்லடியைச் சேர்ந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் இ.பாக்கியராசா,களுதாவளையைச் சேர்ந்த எழுத்தாளர் ஆ.அரசரெத்தினம், வாழைச்சேனையைச் சேர்ந்த எழுத்தாளர் க.செல்வநாயகம்,காத்தான்குடியைச் சேர்ந்த எழுத்தாளர் திருமதி பாத்திமா முஹம்மத் ஆகியோர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் தென்றலின் மாபெரும் பரிசுப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்கள் மற்றும் தென்றலின் குறுக்கெழுத்துப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா,பேராசிரியர் சி.மௌனகுரு உட்பட அரசியல் பிரமுகர்கள்,இலக்கியவாதிகள் பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X