2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

சிங்கப்பூரில் மௌனகுருவின் இராவணேசன்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 12 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன்

பேராசிரியர் மௌனகுருவின்  இராவணேசன்  (ராமாயணத்தின் மறுபக்கம்) சிங்கப்புரில் நேற்றைய தினம்  11ஆம் திகதி  இரவு ஒளிப்படக் காட்சியாக இந்தியச் சங்கத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. 

இராவணேசன் கூத்து காணொளி நிகழ்ச்சியில்,  சிங்கப்பூரின் நாடக மற்றும் கலை இலக்கியத்தை முன்னெடுப்பவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்களால் சிங்கப்பூர் இந்தியர் சங்கம் நிரம்பியிருந்தது.
சிங்கப்பூரில் அரச ஆதரவுடன் தமிழ் மாதம் வருடம்தோறும் நடைபெறுகிறது. அந்த மாதம் முழுவதும் தினம் தோறும் கலைநிகழ்வுகள் இடம்பெறும். அதிலொரு நிகழ்வாக இம்முறை ஏப்ரில் 11ஆம் திகதி மாலை 7.30க்கு அகண்ட திரையில் இராவணேசனை இங்கு காணொளியில் காட்ட சிங்கபூர் இந்திய சங்கத்தினர் ஒழுங்குசெய்திருந்தனர்.

இராவணனைத் தமிழனாக அடையாளப்படுத்திய திராவிட மற்றும் தமிழ்த் தேசியக் கொள்கைப் பற்றாளர்கள் அவனை நல்ல இயல்புகள், சிறப்புகள் உள்ள எதிர்நாயகனாகச் சித்தரித்தனர். அவனை நாயகனாகவும் வைத்து சில இலக்கியங்கள் புனையப்பட்டன. இருப்பினும் இராவணன் ஒரு கொடிய அரக்கன் என்ற இந்திய மரபுப் பார்வையே பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

இராமாயணத்தில் இராவணனுக்குப் பத்துத் தலைகள் கொண்டவனாகவும் சித்தரிக்கப்படுகிறது. இங்கே பத்து தலைகள் என்பது பத்து துறைகளில் தலைசிறந்தவனாக இராவணன் இருந்தான் என்பதுவாகும். சிறந்த வீணை வித்துவான், சிறந்த சிவபக்தன், சிறந்த போராற்றல் கொண்ட வீரன் போன்ற பத்து குணாதிசயசிங்கள் கொண்டவனாகவும் கருதுகோள்கள் உள்ளன.

மட்டக்களப்புக்கு பெருமை தேடித்தந்த சிலரில் பேராசிரியர் சி. மௌனகுருவும் ஒருவராவார். தான் பிறந்த மண்ணின் தொன்மைக் கலைகளை, சிறப்பாகக் கூத்துக்கலையை பிற நாடுகளுக்கும் கொண்டு சென்று பெருமை தேடித்தந்த பேராசிரியரவர்கள் தனது எழுபதாவது அகவையில் கால்பதித்து இன்றுவரை பணியாற்றி வருகிறார்.

தம்முடைய அறிமுக உரையில் கூத்தாடுபவர்களை கூத்தன் என்று குறிப்பிடும் பழக்கத்தை சுட்டி இலங்கை கூத்தில் வட மொழி தென் மொழி கலப்பு மற்றும் துண்பியல் நாயகனாக இராவணனையும் போரை எதிர்க்கும் கதாபாத்திரமாக மீள்புனைவு செய்த மண்டோதரியையும் சித்தரித்து இருப்பதை யும் மேலைத் தேச, கீழைத்தேச வாத்தியங்களைப் பயன்படுத்தி, காட்சி மாற்றங்களையும் ஏற்படுத்தி, கூத்தும் நாடகமும் தந்த ஒரு புதுக்கலையாக நமது கூத்தை விவரித்தார்.

நம் தொன்மைக் கலைகளுக்கு புத்துயிர் கொடுத்துக் கொண்டிருக்கும் நம் பேராசிரியர் கூத்தின் அடி நாதமாக இரண்டு பாடல்களை உச்ச ஸ்ததியில் பாடி ஆரம்பித்து வைத்தார். 

இந்தத் திரையிடல் பற்றிக் கருத்து வெளியிட்ட பேராசிரியர் மௌனகுரு ,

இலங்கைத் தமிழர்களின் கூத்துக் கலையைச் சிங்கப்பூர் மக்களுக்கு எடுத்துரைக்க ஒரு சந்தர்ப்பம் வாய்த்துள்ளது.  நான்சென்ற மாதம் சிங்கபூர் வந்தபோது இராவணேசன் காணொளிப் படத்தை லிபரல் யசவள உழடடநபந இல் சுயஅயயலயயெஅ in ளுழரவா நுயளவ யுளயை எனும் பாடம் எடுக்கும் பேராசிரியர் பெர்னாட் பேற் ஓழுங்கு செய்திருந்தார். அது பற்றி நல்லதொரு அறிமுகமும் கொடுத்திருந்தார். 10சீன மாணவர்கள்அதன்பார்வையாளர்கள் . அதனைத் தொடர்ந்து சிங்கபூர்தேசியபல்கலைக் கழக சமூகவிஞ்ஞனத்துறை ஆராய்ச்சிப் பிரிவினர் தமது கருத்தரங்க மண்டப அறையில் இதனைத் திரையிட்டனர்.
திரையிடப்படமுன் பேராசிரியர் விநீதா சிங் நெறியாளர் பற்றியும் இராவணேசன் பற்றியதுமான அறிமுக உரையொன்றினை பார்வையாளர்களுக்கு வழங்கினார்.

அதைத் தொடர்ந்து நான் இலங்கைத் தமிழ் கூத்துக்கள் பற்றியும் விசேடமாக வடமோடி பற்றியும் அதுஎவ்வாறு நாடகமாக வளர்த்தெடுக்கப் பட்டது என்பது பற்றியும் இராவணேசன் தயாரிப்பு பற்றியும் pழறநச pழiவெ pசநளநவெயவழைn ஒன்று 5 நிமிட நேரம் செய்தேன்.

இது நாடகத்தை இரசிப்பதற்கான ஒரு ஆயத்த நிலையை பார்வையாளர்களுக்கு வழங்கியது. தமிழ்தெரியாத ஐரோப்பியர்,வடஇந்தியர்கள்.தென்இந்தியாவின் மலையாளிகள் சிங்கள மக்கள் தொடக்கம் தமிழ்தெரிந்த இந்திய இலங்கைத் நாட்டவர்களும் பார்வையாளார்களாக  வந்திருந்தனர்.

அதில் வந்திருந்தவர்களே இந்த நிகழ்ச்சியை ஒழுங்குசெய்துள்ளனர் . இதனை ஒழுங்குசெய்துஎன்னைஅழைத்த சிங்கப்பூர் இந்திய சங்கத்தலைவர் ஜோதி அவர்களும்  சிங்கப்பூர் தேசிய நூலாக நூலகர் லதா அவர்களும் நேற்று என்னை அழைத்துச் சென்று திரையிடப்படவுள்ள இடத்தையும் அரங்கையும் காட்டி ஒழுங் குகளை மேற் கொண்டனர் என்று தெரிவித்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X